Esanai Villagers request repair to cremation ground near Perambalur

பெரம்பலூர் அருகே உள்ளது எசனை கிராமம். அந்த கிராமத்தின் வடக்குப் பகுதியில் , கீழக்கரை மற்றும் எசனை கிராமங்களுக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. அதில், தற்போது புல், பூண்டுகள், முட்செடிகள் அதிகளவில் முளைத்து காணப்படுகின்றன. இதனால், இறந்தவர்களை அடக்கம் செய்ய வரும் போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், சுமார் 2 ஏக்கருக்கு மேல் பரப்பளவு சுடுகாட்டில் போதுமான அளவிற்கு இடம் இருந்தும், புதராக மாறி வருவதால், பாம்பு, பூச்சிகளின் புகலிடமாக மாறி வருதால் இறந்தவர்களை அடக்கம் செய்யப்படும் குழிகள் முன்புறத்திலேயே மீண்டும், மீண்டும் தோண்டப்படுகிறது. இதனால், மண்ணில் மக்காத உடல்கள், சடலங்களோடு அடக்கம் செய்யப்பட்ட துணிகள், வெளியே வீசப்படுகிறது. இதனால் அதிக துர்நாற்றம் வீசுகிறது. உடல்களை அடக்கம் செய்ய உடன் செல்பவர்கள் கடும் அவஸ்தயை அனுபவிக்க நேரிடுகிறது. எனவே, சுற்றுப்புறம் தூய்மை காக்கவும், இறந்தவர்களை அடக்கம் செய்யப்பபட்ட குழிகளை நீண்ட நாட்களுக்கு பின்பு தோண்டவும், சுடுகாட்டிவ் வளர்ந்து நிற்கும், செடிகளை அழித்து, இரவு நேரத்திலும் அடக்கம் செய்யும் வகையில் சுடுகாட்டின் கிழக்குப் பகுதிவரை மின் விளக்குகள் அமைத்து ஒளிரச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!