Essay Competition for School Students for World Space Week!
மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் விடுத்துள்ள தகவல்:
மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக, 04.10.2018 முதல் 10.10.2018 வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளிடையே கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம்.
அதன்படி இவ்வருடம் நடைபெற உள்ள கட்டுரைப் போட்டியின் தலைப்புகளாக இளநிலை (6 முதல் 9ம் வகுப்பு வரை) மாணவர்களுக்கு “விண்வெளிச் சுற்றுலா” (“Space Tourism”) என்ற தலைப்பிலும், முதுநிலை (10 முதல் 12ம் வகுப்பு வரை) மாணவர்களுக்கு “வேற்று கிரகத்தில் ஒன்றுபட்ட குடியிருப்பு” ((“United Colony in other Planet”) என்ற தலைப்பிலும் நடைபெற உள்ளது.
இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் வேண்டும். கட்டுரைகள் தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவ மாணவியர்களின் கையெழுத்தில் A4 (210ஒ197அஅ) அளவு தாளில் 2,000 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும், ஒரு பக்கம் மட்டும் எழுதியிருத்தல் அவசியம்.
மேலும் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் தங்கள் பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இந்தக் கட்டுரை தங்களால்தான் எழுதப்பட்டது என்பதை உறுதிப்படுத்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து ஒப்புதல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இக்கட்டுரைகள், 05.10.2018 க்குள் கிடைக்கும் வகையில் The Administrative Officer, ISRO Propulsion Complex, Mahendragiri P.O., Tirunelveli District, Pin – 627 133, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
உறையின் மேல் கட்டுரைப் போட்டி என்று குறிப்பிடப்பட வேண்டும். தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பரிசு பெற்றவர்களின் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்பட்டு அக்டோபர் மாதம் மகேந்திரகிரியில் நடக்கும் உலக விண்வெளி வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களை 04637-281210, 281940, 281230 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9442140183, 9486041737, 9443455411 என்ற கைபேசி எண்ணிலோ எண்ணிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.