Event if DMK and AIADMK wins; If Namthamil wins, revolution – Seeman in Perambalur!
பெரம்பலூர்(தனி)தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.மகேஸ்வரிக்கு ஆதரவு திரட்டி பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர் காங்கிரஸ்திமுக சிங்களர்களுக்கு கைகொடுத்து ஈழத்தில் தமிழர்களை அழித்தொழித்தனர் என்றும், இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு ஆள வேண்டிய நோக்கம் மட்டுமே உள்ளது. மக்கள் வாழ வேண்டும் என்று நினைக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் பொருளாதாரத்தை வலிமைபடுத்தும் இடத்தில் தமிழகம் உள்ளது என்றும் தமிழகத்திற்கு தரவேண்டிய ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிவருவாய்களை மத்திய அரசு தரவில்லை என்றும் பேசினார்.
மத்திய அரசை எதிர்க்க சிங்கப்பெண்ணே பாடலைப் போல் மம்தாபானர்ஜி உள்ளார் என குறிப்பிட்ட சீமான் இந்தியாவை விற்பதில் காங்கிரஸுக்கும் பாஜகவிற்கும் கடும் போட்டி நடக்கிறது என்று நான் பத்தாண்டுகளுக்கு முன்பு சொன்ன போது யாரும் நம்பவில்லை என்றுதெரிவித்தார்.
மக்களின் புரட்சி ஒன்றுதான் இவற்றை எல்லாம் சரிசெய்யும் என்றும், நமக்கு கிடைக்காத நீர் முதலாளிகளுக்கு மட்டும் எப்படி தாரளமாக கிடைக்கிறது என யோசித்து பார்க்கவேண்டும் என்றும் பரப்புரையின் போது பேசிய சீமான் அம்பேத்கர் நள்ளிரவு வரை படித்து கொண்டிருந்ததைப் போல் நான் இவற்றை எல்லாம் எப்படி சரிசெய்வது என சிந்தித்து கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.
முட்டாள்- தேருக்கு முட்டுக்கொடுப்பவன், மடையன்- மடைப்பகுதிகளை பராமரிப்பவன் என இரண்டு சொல்லுக்கு விளக்கமளித்த சீமான் கண்டிப்பாக வரவேண்டும் என சொல்லக்கூடாது, உறுதியாக வரவேண்டும் என்று சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அதிமுக திமுக வெல்வது நிகழ்வு.நாம் தமிழர் வென்றால் வரலாறு புரட்சி என்று சீமான் பேசினார். பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் மு.மகேஸ்வரி, குன்னம் தொகுதி வேட்பாளர் ப.அருள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.