Everybody hates the DMK regime: Candidate Parivendar’s speech in the meeting of BJP executives!

தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி சார்பில் ஐஜேகே வேட்பாளராக டாக்டர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். கரூர் மாவட்டம் அய்யர் மலையில், குளித்தலை சட்டமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் தேர்தல் பணி குறித்து பொறுப்பாளர்கள் பேசினர். இதில் கலந்து கொண்ட டாக்டர் பாரிவேந்தர் பேசியதாவது :

இந்தியாவிற்கு நமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – மோடி நமக்கு கிடைத்தது. ஜனநாயகத்தை காக்க வேண்டியது நமக்கு பொறுப்பு. மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைக்க உள்ளார். சரியான எம்.பி களை தேர்ந்தெடுத்தால் மட்டும் நமக்கான தேவைகளை பெற முடியும்.

தற்போது மோடி மீது மக்களுக்கு மரியாதை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சி மீது எல்லோருக்கும் வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. திராவிட திருவாளர்கள் (திமுக எம்பி கள்) பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்குவதுதான். வேலையாக இருந்தார்கள் என தெரிவித்தார். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நண்பர்களாகவும், நட்பு காரணமாகத் தான் தேவைகளை நிறை வேற்ற முடிந்தது.

ஊழல் வாதிகள் குடும்பத்தில் இருந்து வாரிசுகள் வந்தால் இந்த நாடு ஏற்றுக் கொள்ளாது. மாற்றத்தை கொடுப்பதற்கு திமுகவினர் சூழ்ச்சிகளை செய்வார்கள், ஊழல் பணத்திலிருந்து மக்களுக்கு பணம் கொடுப்பார்.

ஐஜேகே, பிஜேபி இரண்டும் ஒரே கொள்கை யுடையகட்சிகள். பிரதமர் மோடி இந்தியாவிற்கு வந்த பிறகுதான் மரியாதை அதிகரித்துள்ளது. உலக நாடுகள் மோடியை பாஸ் என்று அழைக்கிறார்கள்.

செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவியது மோடி அதற்காக – நாம் நன்றி கடன் பட்டிருக்க வேண்டும். இன்னும் 10 நாட்கள் நமக்கு முக்கியமான நாட்கள். திமுக அமைச்சர்கள் எல்லாம் ஊழல்வாதிகள். பேரும் புகழுக்கும் மட்டும் அரசியலுக்கு வந்துள்ளேன்.

1200 மாணவர்களை பட்டதாரிகளாக .மாற்றியதில் அவர்கள் குடும்பத்தில் விளக்கேற்றியதில் மகிழ்ச்சி. – அண்ணாமலை போன்றோர் வந்த பிறகு தமிழகத்தில் பிஜேபி யில்புரட்சி ஏற்பட்டு உள்ளது.

கடந்த தேர்தலில் குளித்தலை தொகுதி அதிக வாக்குகள் கொடுத்த தொகுதி. இந்த தேர்தலில் மக்களிடம் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாஜக கரூர் மாவட்ட தலைவர் விவி.செந்தில்நாதன், பாராளுமன்ற பொறுப்பாளர் லோகிதாசன், ஐஜேகே பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை அமைப்பு செயலாளர் எஸ்.எஸ். வெங்கடேசன் ஐஜேகே அகில இந்திய துணை தலைவர் நெல்லை ஜீவா, ஐஜேகே கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா மற்றும் பாஜக ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!