Ex-BJP district secretary’s bikes set on fire near Perambalur? Police investigation!
பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் உள்ள ஈச்சம்பட்டி சஞ்சய் காந்தி, தெருவச் சேர்ந்தவர் பாலுசாமி மகன் தனபால்(50), கடந்த 2021 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்தார், நேற்றிரவு வழக்கம் போல் வீட்டின் முன் பகுதியில் உள்ள போர்டிகோவில் தனது இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு குடும்பத்தினருடன் தூங்கி விட்டார்.
இந்நிலையில் தனபால் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ பற்றி எரிவதை கண்டு, எதிர் வீட்டில் வசிக்கும் வரதராஜ்(40), என்பவர் கூச்சலிட்டுள்ளார்.
சத்தம் கேட்டு தனபால் கதவை திறக்க முயற்சித்த போது, கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை திறந்து விட்டதோடு, தனபாலுடன் சேர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அனைத்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பெரம்பலூர் போலீசார் இருசக்கர வாகனம் எதனால் எரிக்கப்பட்டது? முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா? பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறியில் தீப்பற்றி எரிந்ததா? என பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 2 இரு சக்கர வாகனங்கள் நள்ளிரவு நேரத்தில் தீயில் எரிந்த சம்பவம், அக்கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாது, ஈச்சம்பட்டி கிராமத்திலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
விளம்பரம்: