Exam students of Perambalur Aadhav Public School perform foot pooja and get blessings from their parents!
பெரம்பலூர் ஆதவ் பப்ளிக் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர். பள்ளி தாளாளர் ராஜேந்திரன், பூமபிரியா ஆகியோர் தலைமையில் நடந்தது. குருக்கள் ராமன் ஆதித்தியா முன்னிலை வகித்து ஹோமத்தை தொடங்கி வைத்தார்.
அறிவு திருக்கோவல் நிர்வாகி சுந்தர், யோகா வல்லுநர் நிஷா, சிவாச்சாரியார்கள் கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம் மற்றம் ஹயகீரிவர் ஹோமங்களை நடத்தி வைத்தனர்.
முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் 8 மற்றும் 9 ம்வகுப்பு மாணவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 2024-25 ஆண்டிற்கான புதிய மாணவர்கள் சேர்க்கையை அலுவலர்கள் சிங்காரம் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.