Examination results of Class X Releasing Tomorrow: academic instruction to parents
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. இந்த தேர்வில் தேர்ச்சியை தவறவிட்ட மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பெற்றோர்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என கல்வித்தறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்த நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.உஷா தெரிவிதுள்ளதாவது:
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் நாளை புதன்கிழமை வெளியாகிறது. இதில் தேர்ச்சியை தவறவிட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
தேர்வில் தேர்ச்சிக்கான மதிப்பெண்களை பெற முடியாத மாணவர்கள் 14417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
கட்டணம் இல்லாத இந்த தொலைபேசி சேவை மூலம் மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய வகையிலும், அடுத்து வெற்றிபெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
மேலும், உடனடித்தேர்வு எழுதி மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை, ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்ச்சி மதிப்பெண் பெறாத மாணவர்கள், தொடர்ந்து முயற்சி செய்தால் அடுத்து வரும் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம்.
தேர்ச்சி பெறாத மாணவர்கள் அச்சமோ, தயக்கமோ இல்லாமல் அடுத்து வரும் தேர்வுக்கு தயாராக வேண்டும். இதற்கு பெற்றோர்கள், நண்பர்கள் ஆதரவாகவும், நம்பிக்கையூட்டும் வகையிலும் இருந்து மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றார்.