Exporter Seminar for Small and Medium Enterprises: Perambalur Collector Information
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள தகவல்:
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் ”வர்த்தக வாரம்” 20.09.2021 முதல் 26.09.2021 வரையில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி தரத்தினை உயர்த்திடும் வகையில், ”ஏற்றுமதியாளர் கருத்தரங்கு” 24.09.2021 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்பு மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்த கருத்தரங்கமும், ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் வகையில் இம்மாவட்டத்தில் உள்ள முன்னோடி ஏற்றுமதியாளர்களின் பொருட்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளது. தொழில் முனைவோர் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது 04328 – 224595 எண்ணிலோ தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.