Extension of time to participate in voter awareness contest: Perambalur Collector Information!


இந்திய தேர்தல் ஆணையம் “எனது வாக்கு எனது எதிர்காலம் – ஒரு வாக்கின் வலிமை” என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளை வினாடி வினா, பாட்டு போட்டி, விளம்பரம் உருவாக்கம், காணொலி காட்சி மற்றும் வாசகம் உருவாக்கல் ஆகிய ஐந்து தலைப்புகளில் இணையதள முகவரி மூலமாக நாடு தழுவிய போட்டிகள் நடத்திட அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்போட்டிகளில் கலந்துகொள்ள கால அவகாசம் 31.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தலைப்புகளில் நடைபெறும் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், வாக்காளர்கள் உள்பட அனைவரும் கலந்துகொள்ளலாம். மேலும் குறும்படம் உருவாக்கம், பாட்டுப் போட்டி மற்றும் ஸ்லோகன் உருவாக்கம் ஆகியவை மட்டும் நிறுவனங்கள் சார்ந்தவர்கள்;, தொழில்முறை கலைஞர்கள், தொழில் சாராத வகையினர் என்ற மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

இப்போட்டிகளில் கலந்துகொள்ள https://ecisveep.nic.in/contest/என்ற இணையதள முகவரியில் 31.03.2022-க்குள் பதிவு செய்திட வேண்டும். நாடு முழுவதும் நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் போட்டியாளர்களுக்கு தனித்தனியாக அதிக பட்சம் ரூபாய் இரண்டு இலட்சம் வரை மாபெரும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர சிறப்பு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், வினாடி வினா போட்டியில் மூன்றாவது லெவல் முதல் பங்கேற்பாளர் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் நபரோ அல்லது குழுவோ மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு பிரிவில் மட்டுமே கலந்துகொள்ள முடியும். படைப்புகள் அனைத்தும் அரசியல் கட்சி சார்ந்தோ, மத அடிப்படையிலோ, எவ்வித குறிபிட்ட கலாச்சாரத்தை பாதிக்கும் வகையிலோ அல்லது உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையிலோ அமைந்திடக் கூடாது. மேலும் அவை இந்திய பதிப்புரிமை சட்டம்-1957-க்கு உட்பட்டு அசல் படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும்.

குறும்படம் உருவாக்கம், பாட்டுப் போட்டி மற்றும் ஸ்லோகன் உருவாக்கம் ஆகிய போட்டிகளில் பங்கேற்பவர்கள் தங்களது படைப்புகளை ஆங்கிலம், இந்தி உள்பட அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிகளில் விருப்பத்திற்கேற்ப படைக்கலாம். ஆனால் பிராந்திய மொழிகளை பயன்படுத்தப்படும் பொழுது அவை சப்டைட்டில்கள் கொண்டிருக்க வேண்டும். இப்போட்டிகள் தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்தவற்றை இந்திய தேர்தல் ஆணையத்தின் https://ecisveep.nic.in/contest/அல்லது https://voterawarenesscontest.in/ என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணக்கர்கள், வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த அறிய வாய்பினை பயன்படுத்தி மேற்கண்ட தலைப்பில் தங்களது படைப்புகளை மேற்கண்ட இணைய வழியில் விண்ணப்பித்து பரிசுகளை தட்டிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!