Factories must follow the Green Tribunal Directive to protect the environment: Perambalur Collector V. Santha
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தேசிய பசுமை தீர்பாயம் அசல் மனு எண்: 593 / 2017-ல் 21.05.2020 நாளிட்ட உத்தரவின் 18வது பத்தியின்படி, ஊரடங்கு நாட்களில் ஆற்று நீரின் தரம் மேம்பட்டுள்ளது என தெரிவித்ததோடு அதற்கான காரணங்களை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையினை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டால், சுற்றுச்சூழல் தரநிலைகளை தொழிற்சாலைகள் முழுமையாகக் கடைப்பிடிக்க அதிகாரிகளால் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும், என தெரிவித்துள்ளார்.