Fake schools in Perambalur: Politicians and officers who do not notice : Public Distress

பெரம்பலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத போலி பள்ளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், பல ஆண்டுகளாக சீரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதற்கு அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை பணத்திற்காக உடந்தையாக இருந்து கொண்டு, கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர், இதனை கடைசியில் பள்ளியில் சேர்த்த பெற்றோர்கள் கடும் வேதனை அடைந்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரமாண்ட கட்டமைப்புடன் செயல்படும் பள்ளிகளில் செயல்படும் பல பள்ளிகள் உரிய அரசு அங்கீகாரம் இன்றி அதிகாரிகள் துணையுடன் நடத்தி வருகின்றனர். மேலும், அங்கீகாரம் உள்ள பள்ளிகளை காட்டிலும், அங்கீகாரம் பெறாத பள்ளியின் சேர்க்கைக்கு மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதை அறியாமல் பள்ளிப் படிப்பை முடித்து பொதுத் தேர்விற்கு ஹால் டிக்கட் வழங்கப்படும் போதுதான் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவருகிறது. அந்த பள்ளியின் பெயரில் ஹால் டிக்கட் வழங்காமல், மற்றொரு பள்ளியின் பெயரில் ஹால் டிக்கட் வழங்கப்டுகிறது. இதே போன்று, மாற்றுச் சான்றிதழும், வேறு பள்ளியின் பெயரில் வழங்கப்படுகிறது. சில பள்ளிகளில், மற்ற ஊர்களில் இருக்கும், பள்ளியின் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் விளக்கம், இந்தப்பள்ளியை அந்த பள்ளி நிர்வாகத்தின் கீழ் உள்ளது என்று பல ஆண்டுகளாக கூறி வருவது தெரிய வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தால் அதிகாரிகள் மாமூல் பணியை தொடர்கின்றனர். அப்பாவி மக்கள் ஏமாற்றம் அடைவது அனைத்து கட்சியினருக்கும் தெரிந்தாலும், இதை பயன்படுத்தி மிரட்டி தங்களுக்கு சாதமாக தங்கள் கட்சிக்கு நன்கொடை பெற்றுக் கொண்டு கண்டும் காணமல் இருக்கின்றனர்.

மேலும், தனியார் பள்ளிகளில் ஆண்டு விழா நடக்கும் போது அதிகாரிகள் அரசியயல்வாதிகளுக்கு சிறப்பு பரிசுகளாக விலை உயர்ந்த பொன், பொருட்கள் அள்ளித்தருவதால் , அனைத்து துறை அதிகாரிகளும், ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அரசுப்பள்ளிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைப்பு விடுத்தால் ஏதாவது காரணம் கூறி தப்பித்துக் கொள்கின்றனர்.

இந்த நாட்டை வழி நடத்தி செல்ல வேண்டிய அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் வேலி பயிரை மேய்ந்த கதையாக பணத்திற்காக ஏமாற்றத்திற்கு துணை போவது ஜனநாயக விரோத செயலாகும்.

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்களுக்கு விரோதம் செய்யும் செயலை கைவிட்டு, போலி பள்ளி நிறுவனங்களை மூடி ஏமாற்றுவதில் இருந்து காக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!