Family and will fight with determination to meet the challenges in life – the District Social Welfare Officer training for women at the opening ceremony speech.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலமாக பெண்களுக்கான ஆரிவேலைப்பாடு பயிற்சி துவக்க விழா இன்று (01.08.2016) நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் தமீம் முனிசா பேசியதாவது:
பெண்கள் தங்கள் சமூக பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும் குடும்பம் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு மன உறுதியுடன் போராட வேண்டும். மேலும் பெண்களாகிய நீங்கள் இந்த ஆரிவேலைப்பாடு, பயிற்சியினை சிறப்பான முறையில் கற்றுக் கொண்டு தங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதுடன், உங்கள் குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இதுபோன்ற பயிற்சிகள் மூலமாக தங்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், வரும் வருவாயை தங்களது குடும்பம், கல்வி, மருத்துவ மற்றும் அவசர தேவைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்வதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். என பேசினார;.
இப்பயிற்சி மையத்தின் இயக்குனர் (பொ) பா. அருள்தாசன் பேசியதாவது:
இந்த 21 நாட்கள் நடைபெறும் பெண்களுக்கான ஆரிவேலைப்பாடு இலவச பயிற்சியை சிறப்பான முறையில் பயன்படுத்தி சிறந்த தொழில் முனைவோராக உருவாக வேண்டும். இதன் மூலமாக தங்கள் குடும்ப முன்னேற்றமட்டுமில்லாமல் மாவட்ட வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும்.
மேலும் இவ்வாறு பயிற்சி பெற்று நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடையும் போது எங்களுடைய நிறுவனத்திற்கும் நற்பெயரை உருவாக்கி வளா;ச்சி அடைய பேருதவியாக இருக்கும் என்று பேசினார்.
இவ்விழாவில் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் ல.சா.நவின்குமார், ஐ.ஓ.பி., பயிற்சி மைய ஆசிரியர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.