Family Festival and Honorary Festival on behalf of Perambalur CITU tneb


பெரம்பலூர் : தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பென்சன் கிடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட மகத்தான வெற்றியை குடும்ப விழாவாகவும், சென்னையில் வர்தா புயல் காரணமாக மீட்புப்பணியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு பாராட்டு விழாவும், பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள எம்.எஸ்.ஆர், கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

வட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். முன்னதாக கோட்ட செயலாளர் எம்.பன்னீர்செல்வம் வரவேற்றார். எ.சார்லஸ், ஆர்.இராஜகுமாரன், எம்.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச்செயலாளர் எஸ்.இராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். அவது பேசும் போது :

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும் என சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பு 2006 ல் தொடர்ந்த வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் 20.7.2017 அன்று உச்சநீதீமன்றம் வருங்கால வைப்பு நிதி ஆணையத்திடம் ஊழியர்களும் வாரியமும் செலுத்த வேண்டிய பங்கீட்டு தொகையை மின்வாரியமே செலுத்தி ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பென்சன் வழங்க வேண்டும் என்ற மகத்தான தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனை வரவேற்று வெற்றியை கொண்டாடும் வகையில் குடும்ப விழாவாகவும் மேலும் 2016 ல் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வர்தாபுயல் தாக்கிய பொழுது சிறப்பாக பணியாற்றிய மின்வாரிய பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது என்று கூறினார்.

சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி, வட்டசெயலாளர் எஸ்.அகஸ்டின், பொருளாளர் வி.தமிழ்செல்வன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு எ.கணேசன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். கோட்டத் தலைவர் பி.நாராயணன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!