Family festival of Yadavs in Perambalur: 26th: District President Sri Amman Muthiah invites everyone to participate and celebrate!

பெரம்பலூரில் தமிழ்நாடு யாதவ மகாசபை, பெரம்பலூர் மாவட்டஅமைப்பின் சார்பில் யாதவர்களின் குடும்பவிழா 26-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிஅளவில் துறைமங்கலத்தில் உள்ள ஜே.கே.மகாலில் நடக்கிறது.

விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட தலைவரும், ஸ்ரீஅம்மன்பேங்கர்ஸ்குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான என். முத்தையா தலைமை வகிக்கிறார். இதில் மாநில தலைவரும், அமேட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் சரஸ்வதி மருத்துவக்கல்லூரிகளின் நிறுவனத் தலைவருமான டாக்டர் நாசே. ராமச்சந்திரன் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்கிறார்.
மாவட்ட அவைத் தலைவரும், செட்டிகுளம் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியின் தாளாளருமான தமிழ்வாணன், பண்பாட்டுக்கழக செயலாளரும், மகாத்மா பப்ளிக் பள்ளியின் பொறுப்பாளருமான ராஜ்குமார் முன்னிலை வகிக்கின்றனர்.

முன்னதாக பெரம்பலூர் பாலக்கரையில் யாதவர்களின் பண்பாட்டு ஊர்வலம் தொடங்குகிறது. இதில் மாநிலதலைவர் ராமச்சந்திரன் யாதவிற்கு சிறப்பான வரவேற்பும், பிரம்மபுரீசுவரர் கோவில், மதனகோபாலசுவாமி கோவில் மற்றும் எளம்பலூர் சாலை பாலமுருகன் கோவில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பழையபேருந்துநிலையம், காமராஜர் வளைவு சிக்னல், சங்குப்பேட்டை, மதனகோபாபுலம், வெங்கடேசபுரம், பாலக்கரை, வழியாக சென்று விழா நடைபெறும் திருமணமகாலை அடைகிறது.

விழாவில் மாநில பொதுச்செயலாளர் வேல்.மனோகரன், பொருளாளர் எத்திராஜ், மாநில மூத்த தலைவர் செல்வராஜ் மற்றும் மாநில மகளிரணி, இளைஞரணி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர். இதில் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற யாதவகுல மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே ரொக்கபரிசுகளும், கேடயமும் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். மேலும் சிறந்த மதிப்பெண் பெற்ற 100-மேற்பட்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படுகிறது என்றும், மாநில தலைவரை வரவேற்கும் நிகழ்ச்சி மற்றும் குடும்ப விழாவில் அனைத்து யாதவபெருமக்களும் கலந்துகொண்டு குலப்பெருமையை நிலைநாட்ட வருகை தந்து விழாவை சிறப்பித்து தருமாறு மாவட்ட தலைவர் ஸ்ரீஅம்மன் முத்தையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழா ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் எஸ்.பி.ராமர் மற்றும் மாவட்ட துணை பொறுப்பாளர்கள், மகளிரணி, இளைஞரணி உள்ளிட்ட மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், பெரம்பலூர் நகர, வேப்பந்தட்டை,பெரம்பலூர், ஆலத்தூர்,வேப்பூர் ஒன்றிய நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!