Farmer beaten to death due to prior enmity near Perambalur: Gang of 5 acts of frenzy!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மாக்காய்குளம் கிராமத்தில், ராமச்சந்திரன் என்பவர் முன் விரோதம் காரணமாக 5க்கும் மேற்ப்பட்ட கும்பலால் கொடுரமாக அடித்து கொலை செய்யப்பட்டார்.
ராமச்சந்திரன் இன்று மாலை அவரது மகள் துர்கா, சென்னையிலிருந்து சொந்த ஊர் வந்துள்ளார். அவரை அழைத்து வருவதற்காக அரியலூர் ரயில் நிலையம் நோக்கி ராமச்சந்திரன் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். ரசுலாபுரம் – பாலாம்பாடி கிராமங்களுக்கு இடையே வந்த அவரை 5 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து தாக்கியது. இதில் சம்பவ இடத்திலே ராமச்சந்திரன் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு நடத்திய விசாரணையில் நிலப்பிரச்சினை தொடர்பாக கொலை சம்பவம் நடந்ததாக தெரிய வந்துள்ளது.
மேலும், குன்னம் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 3 பேர் குன்னம் காவல் நிலையத்தில் சரண்டர் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.