Farmer death near in Perambalur : death casts doubt on the complaint of his wife
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள உப்போடை அருகே எளம்பலூரை சேர்ந்த விவசாயி ஜெயபிரகாஷ் (வயது 55) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விழுந்து காயங்களுடன் நேற்றிரவு கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆம்புவலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பபட்டு, அங்கிருந்து சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 04.00 மணியளவில் இறந்துவிட்டார்.
இவர் விவசாய வேலை செய்து வருவதாகவும் இவர் கீழே விழுந்த இடத்திற்கு அருகில்தான் இவரது வயல் இருப்பதாகவும் விவசாய வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வரும்பொழுது இச்சம்பவம் நடந்திருப்பதாகவும், இச்சம்பவத்தில் சந்தேகம் உள்ளது என ஜெயபிரகாஷ் மனைவி பரிமளா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கு ராஜரத்தினம் என்ற ஒரு மகனும் யோகேஸ்வரி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.