பெரம்பலூரில், தோட்டக் கலைத்துறை சாகுபடி திட்டத்தில் மின் இணைப்பு பெற்றவர்களுக்கும் வேளாண் உற்பத்திக்கான மின் மானியத்தை வழங்க வலிறுத்தி தமிழக விவசாய சங்கத்தினர் இன்று பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர், அச்சங்கத்தின் மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்பாட்டத்தில், தோட்டக்கலை சாகுபடி திட்டத்தில் 31ஏ1ல் வழங்கப்படுகின்ற முன்னரிமையில் மின் இணைப்பு பெற்றவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும்,
புதிய விவாயத்திற்கான மின் இணைப்பு கேட்டு லட்சக்கணக்கான விவாசயிகள் காத்து உள்ளனர். அரசு ஆண்டுக்கு 40 ஆயிரம் மின் இணைப்பு வழங்குவது என்ற இலக்கினை ஒரு லட்சமாக உயர்த்தி நடப்பு ஆண்டுகளிலேயே மின் இணைப்பு வழங்க வேண்டும்,
மின்வாரியஅறிவிப்பை ஏற்று புதிய மின் மோட்டார் வாங்கி பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும்,
கடந்த பிப்.1ம் தேதி அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் அனுப்பட்ட கொள்ளை விவசாயிகளுக்கு விரோதமாக இருப்பதால் அந்த விதியை திரும்ப பெற வேண்டும், அததோடு கூட்டு பட்டா அல்லது கூட்டு கிணறு விவசாயத்திற்கு மின் இணைப்பு கொடுப்பதில் பின்பற்றிய முறையை தொடர வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர், பேரணியாக அங்கிருந்து பாலக்கைரை வழியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு பெரும் திரளாக வந்து மனு கொடுத்தனர். முன்னதாக பேரணியை தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் பேரணியை துவக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால், தமிழக விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வி.நீலகண்டன், தோட்டக்கலை விவசாயிகள் சங்க தலைவர் கருப்பணன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.