Farmer sentenced to one year in jail under Prevention of Torture Act: Special Court verdict!

பெரம்பலூரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விவசாயிக்கு ஓராண்டு சிறை தண்டனையை விதித்து சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

பெரம்பலூர் அருகே நெடுவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சிவக்குமார் (47). விவசாயி. இவர் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம்தேதி அதே ஊரை சேர்ந்த பாரதி மனைவி ராஜாத்தி என்ற பெண்ணிடம் ஆசை வார்தை கூறி தகாத முறையில் நடந்தகொண்டதோடு, ஜாதி பெயரை கூறி திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த ராஜாத்தி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்த புகாரின் பேரில் மருத்துவர் போலீசார் வழக்கு பதிந்து சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிவக்குமார் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கு பெரம்பலூர் எஸ்சி, எஸ்டி சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் கதிர்.கனராஜ் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி, குற்றவாளி சிவக்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!