Farmers besiege near Perambalur at midnight, claiming to give importance to traders at the paddy procurement center!

பெரம்பலூர் அருகே பூலாம்பாடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாயாரிகளுக்கு முன்னுரிமை தருவதாக கூறி விவசாயிகள் நள்ளிரவில் முற்றுகையிட்டு போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் அரசின் நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது. அரும்பாவூர், பூலாம்பாடி, கடம்பூர், கள்ளபட்டி, பெரியம்மாபாளையம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை பூலாம்பாடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

அந்த நெல்கொள்முதல் நிலையத்திற்கு தற்போது அதிகளவிலான நெல்மூட்டைகள் வந்துகொண்டு இருக்கின்றன. இதனால் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அதிகபட்சமாக ஒருவாரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பூலாம்பாடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளை காக்க வைத்து விட்டு வியாபாரிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன்படி இரவு நேரத்தில் சேலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் லாரியில் நெல்மூட்டைகளை கொண்டுவந்துள்ளார். அவரின் நெல்மூட்டைகளை உடனடியாக இறக்கி கொள்முதல் செய்யப்படுவதை அறிந்த விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினர். வியாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என்று அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

அதிகாரிகளின் துணையோடு இச்செயல் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய விவசாயிகள்,தங்களை மட்டும் ஏன் காக்க வைக்கின்றனர் என கேள்வியும் எழுப்பினர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் நெல்லை முன்னுரிமை தந்து கொள்முதல் செய்வதாக கூறப்பட்டதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். பூலாம்பாடி அரசு நெல்கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் நள்ளிரவில் முற்றுகையிட்டு போராட்டம் செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!