Farmers of Perambalur district thank the Chief Minister for waiving crop loans

உழவுத்தொழில் அன்றி, பிற தொழில்களைச் செய்யும் அனைவரையும், உழவர்களே தாங்குவதால், அவர்களே இந்த உலகத்திற்கே அச்சாணி போன்றவர்கள். ஒரு நாட்டின் வளம், அந்த நாட்டின் விவசாயத்தைப் பொறுத்தே அமையும். அதனால்தான், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, வேளாண்மை உள்ளிட்ட முதன்மை துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, பல திட்டங்களைத் தீட்டி,அதனைச் செயல்படுத்த, அதிக நிதி ஒதுக்கீடும் வழங்கினார். அந்த வழியை வழுவாமல் பின்பற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசும், வேளாண் பெருமக்களின் நலன் பேணவும், வேளாண்மை செழிக்கவும் பல திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. விவசாய பெருங்குடி மக்கள் செழிப்பாக விவசாயம் செய்வதற்கு குடிமராமத்து மற்றும் பல்வேறு நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டங்கள் மூலம் சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்கள், வேளாண் தொழில் செழிக்க நுண்ணீர்ப் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப் பண்ணையம், வேளாண் விற்பனைமையங்கள் மேம்பாடு, காய்கறி, பழங்கள் சாகுபடியை ஊக்குவிக்க சந்தை தொடர் கட்டமைப்புத் திட்டம், உயர்தொழில்நுட்ப சாகுபடி,பயிர் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது. மேலும் விவசாயிகளுக்கென வேளாண் விற்பனை மையம் அமைத்தல், வேளாண் சந்தைப்படுத்துதல் துறையின் மூலம் விவசாயிகளிடம் நேரடி வணிக திட்டங்களையும் சிறப்பான முறையில் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

கூட்டுறவு வங்கிகளில் ரூ.100 செலுத்தி தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொண்ட உறுப்பினர;களுக்கு பயிர;களுக்கு ஏற்றவாறு சிட்டாவின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.3,00,000 வரை ஓராண்டிற்குள் செலுத்த தக்க வகையில் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் பெறப்படும் கடன் தொகையில் குறிப்பிட்ட சதவீத அளவிற்கு மானிய விலையில் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வறட்சி காலங்களிலும் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க வறட்சி நிவாரண நிதியும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இது போன்ற உதவித்தொகையானது, விவசாயிகளின் துயரைத் துடைத்தாலும், அவர்கள் மீண்டும் பயிர்த்தொழிலைத் தொடர உதவ வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு எண்ணியது .மேலும், விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள், சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் கீழே விழுந்தவர்களை மேலே தூக்கி விட்டால் மட்டும் போதாது, அவர்கள் மேலும் வலுப்பெற உதவி செய்திட வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் அரசு செயல்பட்டு வருகின்றது.

எனவே, தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற16.43இலட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான12,110கோடி ரூபாயையும், அரசு தள்ளுபடி செய்தது தானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் இக்கட்டான நிலையை அறிந்த முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வாங்கியிருந்த விவசாயிகளுக்கு பயிர்க்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15,987 ஆண் விவசாயிகளும், 4,969 பெண் விவசாயிகளும் என மொத்தம் 20,956 விவசாயிகளுக்கு ரூ.164.56 கோடி பயிர்கடனும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9,922 ஆண் விவசாயிகளும், 4,954 பெண் விவசாயிகளும் என மொத்தம் 14,876 விவசாயிகளுக்கு ரூ.104.26 கோடி பயிர்கடனும், என பெரம்பலூர் மாவட்டத்தில் 25,909 ஆண் விவசாயிகளும், 9,923 பெண் விவசாயிகளும் என மொத்தம் 35,823 விவசாயிகளுக்கு ரூ.268.83 கோடி கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களை முதலமைச்சரால் 110விதியின் கீழ் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யபடும் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவது தெரிவித்ததாவது:

நான் பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர;. எனக்கு சுமார; நான்கு ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் உள்ளது. எனது நிலத்தில் குச்சி பயிர; (மரவள்ளி கிழங்கு) சாகுபடி செய்துள்ளேன். அவற்றுக்கு வருடந்தோறும் செடிகளுக்கு மருந்து தெளிப்பு மற்றும் இதர பணிகளுக்காக பெரும் தொகை செலவு செய்து வந்தேன். அதற்காக எனது அருகாமையில் உள்ள அம்மாபாளையம் வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.1,31,005 கடன் வாங்கியிருந்தேன். தற்போது பெய்த கனமழையின் காரணமாக பயிர;கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. வாங்கிய கடனை திருப்பி அடைப்பதற்கு வழியில்லாமல் கலக்கமுற்றிருந்த நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு விவசாயி ஆக இருப்பதனால் விவசாயிகளின் நலன் கருதி மானிய விலையில் உரம் வேளாண் இடுபொருட்கள் வேளாண் இயந்திரங்கள் 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் போன்ற எண்ணற்ற திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறார்கள். தற்போது விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தது போல் இனிப்பான அறிவிப்பினை அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பனங்கூரில் வசித்து வரும் வசந்தா என்பவர் பேசுகையில்:

நான் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பனங்கூரில் வசித்து வருகிறேன். எனக்கு 2 மகன்கள். ஒரு மகன் விவசாய தொழிலும், மற்றொரு மகன் கூலி வேலையும் செய்து வருகின்றனர். எனக்கு ஒரு ஏக்கர; நாற்பது சென்ட் நிலம் உள்ளது. எனது விவசாய நிலத்தில் மஞ்சள் பயிர் செய்துள்ளேன். எனது அருகாமையில் உள்ள மருவத்தூர; வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ 2 இலட்சம் பயிர்கடன் பெற்றுள்ளேன். பயிர்க்கடன் பெற்று அதன் மூலமாக செடிகளை பராமரித்தல் மற்றும் பொருட்கள் மானிய விலையில் வாங்குவதற்காக இந்த தொகை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. விவசாய நிலத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற வருமானத்தை கொண்டு கடன் தொகையை செலுத்த சிரமமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பயிர் கடன் தள்ளுபடி செய்தது எங்களது வாழ்வில் மறுமலர;ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு விவசாயியாக இருப்பதனால் என்னை போன்ற விவசாயிகளின் கஷ்டங்களை அறிந்து பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளார். எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் சார்பாகவும் என் குடும்பத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் வசித்து வரும் தனலெட்சுமி என்பவர; கூறியதாவது:

நான் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் வசித்து வருகிறேன். எனக்கு ஒரு மகன் உள்ளான். எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். இதில் வரும் வருமானத்தை வைத்துதான் என் மகனை படிக்க வைத்து வருகிறேன். எனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மஞ்சள், நெல் ஆகியவை பயிர் செய்திருந்தேன். அவற்றின் பராமரிப்பு செலவுகளுக்காக அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.94,500; விவசாய பயிர்க் கடன் வாங்கியிருந்தேன்;. விவசாயத்தில் போதிய அளவு வருவாய் ஈட்ட இயலாத சூழ்நிலை ஏற்பட்டதனால் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனால் இந்த வருமையை எவ்வாறு சமாளிப்பது என கலக்கமுற்றிருந்த நேரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பு எங்களுக்கு மிகவும் பேருதவியாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மழை நீரை முழுமையாக சேகரிக்கும் வகையில் ஏரி மற்றும் கால்வாய்கள் தூர்வாரபட்டுள்ளது. இதனால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் சாகுபடி செய்வதற்கு பேருதவியாக உள்ளது. தற்போது கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை தள்ளுபடி செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாய பெருமக்களின் துயர் துடைப்பதற்காக இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு விவசாய சங்கங்களும் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைத் தீர்ப்பதே தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி. கே. பழனிசாமி தலைமையிலான அம்மாவின் அரசு முதல் கடமை என்னும் நிலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையினால், பயிர்க்கடன் நிலுவை வைத்துள்ள 16.43 இலட்சம் வேளாண் பெருமக்களும் எந்த விதமான சிரமமும் இன்றி, வரும் ஆண்டில் பயிர் சாகுபடியைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது அனைத்து தரப்பு பொதுமக்களின் ஒருமித்த கருத்ததாக உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!