Farmers protest against wasted water from Visuvakudi reservoir near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டைமாந்துறை எல்லையில் விசுவக்குடி நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் (ஏரி) இருந்து அன்னமங்கலம், பூஞ்சாலை மற்றும் வெங்கலம், உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில், அன்னமங்கலம் கிராமத்தல் உள்ள ஏரிக்கு நீர்வரத்து பாதிப்பு ஏற்பட்டதாக ஏற்கனவே மனு கொடுத்து இருந்த நிலையில் தொடர்ந்து நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி வயல்வெளிகளில் வீணாகி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அன்னமங்கலம் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, அவ்வழியே வந்த அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார், மற்றும் வருவாய் மற்றும் வளர்ச்சித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். பின்னர் சிறைப்பிடிக்கப்பட்ட பேருந்துகள் விடுவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. விவசாயிகள் போராட்டத்தின் போது, விசுவகுடி அணையில் இருந்து தண்ணீர் பாசனத்திற்கு திறப்பதை நிறுத்தி, அன்னமங்கலம் ஏரிக்கு பாசன வாய்க்கால் ஏற்படுத்தி தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை குறித்து நாளை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!