Farmers’ Union petition to RDO in Perambalur asking for 100 days of work

தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியமாக வழங்க வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகளை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை 250 நாட்களாக உயர்த்தி இத் திட்டத்தை நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு செய்த அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை வேண்டும், ஒரு ஆண்டுக்கான வேலை தொகுப்பை ஊராட்சி அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வேலைக்கான மனுவை ஊராட்சி நிர்வாகம் வாங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை பெரம்பலூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடத்தி கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். விதொச மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பக்கிரிசாமி கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.தேவகி, வி.ஜோதி, ஆரோக்கியசாமி மற்றும் நிர்வாகிகள் சரசு, சாராதா, இளங்கோவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!