RT Ramachandran MLA urges Assembly to provide necessary equipment to Karai General Hospital!
பெரம்பலூர் புதிய பேருந்து வளாகத்தில், தேசிய வங்கி கடனையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மின் வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது. விவசாயிகளுக்கு இலவச மின்சார சலுகை தொடர வேண்டும். பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல், மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்கிட வேண்டும்.
வறட்சி, தொடர் மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயர்துடைக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர்க் கடனை தள்ளுபடி செய்ததுபோல, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு முறையாக மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கைதட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு 97-ஆவது பிறந்த நாளையொட்டி, அப்பகுதியில் உள்ள அவரது சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பொருளாளர் மணி, சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், அன்பழகன், துரைராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.