Father dies after being attacked by his son near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட தந்தையை மகன் குச்சியால் தாக்கியதில் உயிரிழந்தார். போலீசார் மகனை கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (65).இவரது மகன் அசோக்ராஜ் (23). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு, மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும், கடந்த 3 மாதங்களாக முறையாக மாத்திரை எடுத்துக் கொள்ளாததால், அடிக்கடி வீட்டில் உள்ளவர்களை அடித்து வந்துள்ளார். நேற்று இரவு சுமார் 10 மணி அளவில், அவரது தாய் மணிமொழியை தாக்கி உள்ளார். இதனால், பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார்.
வீட்டில் தனியாக இருந்த தந்தை செல்வராசுவை அசோக்ராஜ் குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் சம்பவ இடத்திலேயே செல்வராசு துடிதுடித்து இறந்துள்ளார். இன்று காலை வந்து மணிமொழி பார்த்த போது, கணவர் செல்வராசு இறந்து கிடப்பதை குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அசோக்ராஜை கைது செய்தனர்.
செல்வராசுவின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.