Father Hans Roever’s 116th birthday celebrate at Perambalur || பெரம்பலூரில் தந்தை ஹேன்ஸ் ரோவரின் 116 வது பிறந்த நாள் விழா
ஜெர்மனியில் பிறந்து பெரம்பலூரில் கல்வி நிறுவனத்தை துவக்கிய தந்தை தந்தை ஹேன்ஸ் ரோவரின் 116 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கல்வி நிறுவனங்களில் கரன்சிகளை மட்டுமே நோக்கமாக அன்று முதல் இன்று செயல்பட்டு வருகின்றன. ஆனால், அன்றே தந்தை ஹேன்ஸ் ரோவர் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் பகுதி மக்கள் கல்வியில் முன்னேற மகத்தான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர். எண்ணற்ற ஏழை எளிய ஆதவற்ற மாணவ மாணவியர்கள் இங்கு பயின்று இன்று தங்களது வாழ்க்கை உயர்ந்துள்ளனர்.
உண்மையில் இவரும் நம்ம ஊர் காமராஜரை போன்றே ஒரு கல்வித் தந்தை தான் என்பதில் சந்தேகமில்லை.
ரோவர் கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகள், பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு இன்று அன்னதானம், இரத்ததானம், மரக்கன்றுகளை வழங்குதல், நீர் மோர் பந்தல் அமைத்து ரோவரின் நினைவாக கொண்டாடினர். அதில் எசனை பாரத் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.