Faulty information and informing the public hospital patients waiting ultrasound scan!

ct-scanner-perambalur-gh
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிடி மற்றும் அல்ட்ரா ஸ்கேன் எடுக்காமல் அலைக்கழிப்பு செய்வதால் நோயாளிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் வாகன விபத்துகளில் படுகாயமடைந்து வருவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.

இதில், தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற வருபவோர்களும், கர்ப்பிணி பெண்களும் வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்கள் அல்ட்ரா மற்றும் சிடி ஸ்கேன் முன் பதிவு அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவது வழக்கம், இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஸ்கேன் எடுக்க செல்லும் அனைவரும் நீண்ட நேரமாக காத்திருக்க வைப்பதோடு, நாள் ஒன்றுக்கு 30 பேருக்கு மட்டுமே ஸ்கேன் எடுப்பதாக குற்றம் சாட்டும் நோயாளிகள், அதிலும் பாரபட்சம் காட்டுவதாகவும், முறையான பதில் இல்லாமல் இரண்டு மூன்று முறை அழைக்கழிக்கப்பட்டு ஸ்கேன் எடுத்தாலும் ஸ்கேன் ரிப்போர்ட் பெறுவதற்கும் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாகம், வேதனை தெரிவிக்கும் 100க்கும் மேற்ப்பட்ட நோயாளிகள் ஸ்கேன் மிஷின் பழுதாகி விட்டது என்ற தகவல் தெரியாமல் நேற்று முன்தினம் முதல் கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனைக்கு வந்து காத்திருக்கின்றனர்.

இதனிடையே ஸ்கேன் எந்திரம் பழுதாகி விட்டது என்று எந்த ஒரு தகவலும் ஸ்கேன் சென்டர் முன் எழுதியும் ஒட்டப்படவில்லை இதன் காரணமாக கர்ப்பிணி பெண்கள் முதல் நோயாளிகள் என பலர் கால் கடுக்க இன்று காலை முதல் காத்திருக்கின்றனர்.

இதனை பெரம்பலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் கவனத்தில் கொண்டு ஸ்கேன் எடுக்க செல்லும் அனைவரையும் நாள் கணக்கில் காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் ஸ்கேன் எடுத்து ரிப்போர்ட் வழங்கி நோயின் தாக்கம் தீவிரமடைவதற்குள் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபற்றி தகவறிந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, சம்மந்தப்பட்ட ஸ்கேன் எந்திரத்திலுள்ள கேமரா பழுதாகி விட்டதால் ஸ்கேன் எடுக்கும் பணி தடைபட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், தெரிவித்தனர். சிறிய மாவட்டமான பெரம்பலூரை நிர்வாகம் செய்ய தெரியாமல் ஆட்சியர் முதல் கடைகோடி அலுவலர்கள் வரை தடுமாறுவதை இந்த அலட்சிய போக்கை காட்டுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!