Female body in a decomposing state in a forest near Perambalur; Police are investigating the mysterious death!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தில், தனப்பிரகாசம் நகர் என்ற இடத்தை ஒட்டியுள்ள மலை ஒட்டிய காட்டுப்பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அரும்பாவூர் போலீசார்,

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் யாருடையது? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் , முதற்கட்ட விசாரணையில், சுமார் 10 நாட்கள் மேல் ஆகி அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம், அரும்பாவூர் அருகே உள்ள அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் என்பவரின் மனைவி புஷ்பா(43) இருக்கலாம் என கருதிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்விற்காக, பெண்ணின் உடலை, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பெண்ணின் சாவிற்கான காரணம் குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணையை தீவிர முடுக்கி விட்டுள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!