Female farmer killed by snake bite near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், பரவாய் கிராமத்தில் உள்ள கழிச்சமேடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி மனைவி பழனியம்மாள் ( 45)
இவர் இன்று காலை வயலில் களை எடுப்பதற்கு அதிகாலை இருட்டில் வீட்டின் முன் பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவர் நடந்து சென்ற பாதையில் கிடந்த நல்ல பாம்பு பழனியம்மாளின் காலை கொத்தியது.
பாம்பு கடித்த வலி தாங்காம முடியாத பழனியம்மாள் கத்தினார். சத்தத்தை கேட்ட பழனியம்மாளின் மகன் வடிவேல் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். வடிவேல் தனது தாயாரை கடித்த பாம்பையும் அடித்து கொண்டு வந்திருந்தார்.
அங்கு உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பழனியம்மாள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாய வேலைக்கு சென்ற பாம்பு கடித்து பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.