Fertilizers for farmers at old prices; Perambalur Collector Announcement!

பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா 1950 மெ.டன்கள், டி.ஏ.பி. 380 மெ.டன்கள், பொட்டாஷ் உரங்கள் 1070 மெ.டன்கள் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 4650 மெ.டன்கள் என மொத்தம் 8050 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளது. உரங்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தை மத்திய அரசாங்கம் அதிகரித்துள்ளதால், விலை ஏற்றம் செய்யப்பட்ட உரங்களை இனி பழைய விலைக்கே வாங்கிக்கொள்ளலாம்.

உரம் மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிக பட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விவசாயிகளுக்கு உரிய இரசீதுடன் ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்யவேண்டும். விற்பனை செய்தவுடன் இருப்பு விவரங்களை சரியாக பராமரிக்க வேண்டும். உரம் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல்பலகை பராமரிக்கப்பட வேண்டும். உர உரிமத்தில் அனுமதி பெறாத உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது.

உர விற்பனை நிலையங்களில் ஏற்கனவே இருப்பில் உள்ள உரங்களை விவசாயிகள் வாங்கும்போது உர மூட்டைகள் மீது அச்சடிக்கப்பட்டுள்ள விலையை பார்த்து உறுதி செய்த பின்னா; அதற்குரிய தொகையை கொடுத்து உரங்களை பெற்றுக்கொள்ளலாம். உர மூட்டைகள் மீது விற்பனை விலை அழித்தல் அல்லது கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வது மற்றும் தரமற்ற உரங்களை விற்பனை செய்வது ஆகியவை கூடாது. இதனால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, உரிய ஆவணங்கள் இன்றி அதிக உரங்கள் விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பாக, புகார்கள் ஏதும் இருப்பின் விவசாயிகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் 88256 31615 (பெரம்பலூர், 98947 48739 (ஆலத்தூர்), 94425 34865 வேப்பூர்), 80567 82946 (வேப்பந்தட்டை) மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) 94870 73705 என்ற அலைபேசி எண்ணிலும் மற்றும் வேளாண்மை அலுவலர் (தரக்கப்பட்டுப்பாடு) 96777 99938 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க, அறிவுறுத்தியுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!