Festival in Perambalur Pilimisai Village: Minister Sivashankar started the chariot by holding the rope!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பிலிமிசை கிராமத்தில் இன்று முனியனார், புது கருப்பனார், கல்லணை எமாபுரி ஆகிய சாமிகளின் திருத்தேர் விழாவை, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஆலத்தூர் ஒன்றிய சேர்மனும், திமுக ஒன்றிய செயலாளருமான என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், கிராம முக்கியஸ்தர்கள், கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.