Festival special Mass on the Solemnity of Christ the King RC Church Namakkal; A lot of participation
நாமக்கல் ஆர்சி சர்சில் கிறிஸ்து அரசர் பெருவிழா சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நாமக்கல் திருச்சி ரோட்டில் போலீஸ் நிலையம் அருகில் கிறிஸ்து அரசர் சர்ச் உள்ளது. இந்தக் சர்ச்சில் கிறிஸ்து அரசர் பெருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 9.30 மணிக்கு திருச்சி செயின்ட்பால் கல்லூரி சேவியர் லாரன்ஸ் திருக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவை முன்னிட்டு 19ம் தேதி மாலை 6.,30 மணிக்கு நவநாள் திருப்பலி துவங்கியது.
வேலாயுதம்பாளையம் லாசர் சுந்தர்ராஜ், பரமத்தி பீட்ட ஜான்பால் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 20ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற நவநாள் திருப்பலி நிகழ்ச்சியில் ராசிபுரம் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 21ம் தேதி நடைபெற்ற நவநாள் திருப்பலியில் கரூர் ராயப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 22, 23, 24ம் தேதிகளில் நடைபெறும் நவநாள் திருப்பலி நிகழ்ச்சிகளில் கோவை ஜோசப் பிரகாசம் கலந்துகொண்டார்.
நேற்று 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை புதுநன்மை வழங்கும் விழா மற்றும் கிறிஸ்து அரசர் விழா நடைபெற்றது. காலை 9 மணிக்கு நடைபெறும் திருவிழாத் திருப்பலி நிகழ்ச்சியில் வாழப்பாடி விமல்தாமஸ் கலந்துகொண்டார். மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் ராஜமாணிக்கம், சாலமோகன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். மாலை 6.30 மணிக்கு கிறிஸ்து அரசு தேர்பவனி நாமக்கல் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது. இரவு 9.30 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீர் மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜான் அல்போன்ஸ், அருள்சுந்தர் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.