Filed a case against Former DMK minister A Raja! Sensation in Perambalur !!
பெரம்பலூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் துரை.பெரியசாமி என்பவர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத் புகார் விவரம்:
கடந்த செப்.18 ம் நாள் அன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் , திமுக சார்பில், அதிமுக அரசைக் கண்டித்து கலெக்சன்! கரப்பசன் !! என்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா அந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை விமர்ச்சித்தும், அதிமுக அரசை விமர்ச்சித்தும் பேசியதாகவும், மேலும், திமுக ஆட்சிக்கு வந்த 2வது நாளில் அதிமுகவினர் சிறைகளில் களி சாப்பிடுவார்கள், அதிமுக கூடாரம் கூண்டோடு காலியாகும் என்று பேசியதாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், பெரம்பலூர் போலீசார் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா மீது 503, 504, 505 (I), 506 (II) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால், பெரம்பலூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.