Filed as an independent candidate in Kunnam as political parties did not give importance to the Kal Otter community!

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், உலிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் செல்வராஜீபெரம்பலூர் மாவட்டம்,குன்னம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு இன்று குன்னம் சட்ட மன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான எஸ்.சங்கரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சுயேட்சை வேட்பாளர் செல்வராஜீயுடன் இருவர் மட்டுமே, தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்குள் முகக் கவசம், அணிந்தபடி பாதுகாப்பாக எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியாக வந்து மனு தாக்கல் செய்து விட்டு சென்றனர். மனு தாக்கல் செய்து விட்டு, உறுதி மொழி படிவத்தை எடுத்து படிக்க முயன்ற போது, அந்த படிவம் ஆங்கிலத்தில் இருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆங்கிலத்தில் படித்து விடுங்கள், ஆங்கிலத்திலேயே படித்து விடுங்கள் என கூறியதால், என்ன செய்வது என்று குழப்பமடைந்த சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் பின்னர் தமிழில் இருந்த உறுதிமொழி படிவத்தை வாங்கி படித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது, அரசியல் கட்சிகள் கல்ஒட்டர் சமூகத்திற்கு முக்கியத்துவம் தராமல் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்துவதை கண்டித்து வேட்பு மனு தாக்கல் செய்தாக தெரிவித்தார்.

அருகில் உள்ள கெங்கவள்ளி, ராசிபுரம், துறையூர், தலைவாசல், பெரம்பலூர் ஆகிய தொகுதிகள் தனி தொகுதியாக இருந்ததால், குன்னம் வந்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!