Film director hacked to death in Perambalur star hotel!

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரையை சேர்ந்தவர் தமிழ் செல்வா (எ) செல்வராஜ் (39). இவர் சினிமா படங்களை இயக்கி உள்ளார். அதோடு, பல குறும்படங்கள் எடுத்து விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், இவர் மீது, பெரம்பலூர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுலையில் உள்ளதோடு, பிரபல ரவுடி லிஸ்டிலும் பெயர் உள்ளது.

இன்று தனது திருமணம் மற்றும் பிறந்த நாளை கொண்டாட, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் பாரில், மது அருந்திக் கொண்டு இருந்தார். அப்போது, முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் வீச்சரிவாளுவன் உடன் இருந்தவர்களை விலகி கொள்ள அறைகூவல் விடுத்து தமிழ் செல்வா (எ) செல்வராஜை சராமரியாக வெட்டிக் கொன்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இதனால் பாரில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.

இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பெரம்பலூர் போலீசார், மற்றும் போலீஸ் எஸ்.பி ஷ்யமளாதேவி, கொலையளிகள் விட்டுச் சென்ற தடங்களையும், ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலையான செல்வராஜ் திமுக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!