Financial assistance to animal welfare organizations; Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்டத்தில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் மூலம் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விலங்குகள் நலனில் அக்கறையுள்ள அமைப்புகள் கீழ்க்காணும் திட்டங்களை செயல்படுத்திட நிதி உதவி கோரி உரிய படிவத்தில் அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சை அளிப்பதற்கு நிதியுதவி, காயமடைந்த மற்றும் நோய் வாய்பட்ட விலங்குகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக SPCAs / AWO, NGOs- களுக்கு மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி கொள்முதல் செய்திட நிதியுதவி, வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் மூலம் ஆதரவற்ற கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் மற்றும் விலங்குகளுக்கு உறைவிடம் (Animal Shelter) கட்டுவதற்கு நிதியுதவி, தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திட கருத்தடை அறுவை சிகிச்சை (ABC) மற்றும் ஆதரவற்ற தெரு நாய்கள் விலங்குகளுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்துதல் போன்றவைகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

மேற்கண்டவாறு பிராணிகள் நலனில் அக்கறை கொண்டு பிராணிகளுக்கு உதவிடும் பொருட்டு உணவு வழங்குதல், சிகிச்சை அளித்தல், பிராணிகளுக்கு உணவு வசதி ஏற்படுத்தி நடத்தி வருதல், தடுப்பூசி போன்ற பணிகளை மேற்கொள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் நிதியுதவிபெற்றி https://cms.tn.gov.in/sites/default/files/announcement/ahf_TNAWB_041122.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!