Financial corporate employees disputes with family members: broken hearted young men consumed poison to commit suicide: arumbavur Police Investigation

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அருண்குமார்


நிதி நிறுவன ஊழியர்கள் குடும்பத்தினருடன் தகராறு : மனமுடைந்த வாலிபர் விஷமருந்தி தற்கொலை முயற்சி : போலீஸ் விசாரணை

தவணை செலுத்திய பின்பும், நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததுடன் வீட்டில் தகராறு செய்ததால் மனமுடைந்த வாலிபர் விஷமருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் அருண்குமார்(27) பூச்சு மருந்து வியாபாரம் மற்றும் பூச்சு மருந்து விற்கும் ஏஜென்சியும் நடத்தி வந்துள்ளார். அருண்குமார் கடந்த 2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம், பெரம்பலூர் துரைமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் (சோழமண்டலம் பைனான்ஸ்) ஷவர்லெட் என்ஜாய் காருக்கு 5 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தான் பெற்ற கடனுக்கான தொகையை மாதத்ததவணையில் தலா ரூ14169 வீதம் செலுத்தி வந்துள்ளார். கனணி கோளறு மற்றும் சில இடர்பாடுகாளால் இரண்டு மாத தவணைத் தொகையை தாமதமாக செலுத்தி உள்ளார். தவறிய தவணைகளுக்கு அபராத்தை சேர்த்தும் செலுத்தி உள்ளார். ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள் அருண்குமாரிடம் மேலும், சில தவணைக்கான தொகை பாக்கி உள்ளது என நெருக்கடி கொடுத்ததோடு, அவரது வீட்டிற்கு சென்று அவரது அம்மா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அருண்குமார் கட்ட வேண்டிய பணத்தை கட்டி முடித்த பின்னரும் நிதி நிறுவன ஊழியர்கள் தரும் நெருக்கடி தன்னை வேதனை படுத்துவதுவதுடன், குடும்பத்தாரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதுடன், ஊரிலும் அக்கம் பக்கம் உள்ளவர்களிமும் அவமானப்பட நேர்ந்ததால், தான் உயில் வாழ விரும்பவில்லை என்றும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து விட்டு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மயங்கி கிடந்துள்ளார்.

இதனையறிந்த அப்பகுதியினர் அருண்குமாரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பணம் கேட்டு கொடுத்த நெருக்கடியால் மனமுடைந்து பூச்சு மருந்து வியாபாரம் செய்து வந்த வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அரியலூர், தஞ்சை, ஆகிய மாவட்டங்களில் டிராக்டரை அடியாட்களுடன் சென்று பறிமுதல் செய்ததால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!