Finding love his wife, a young man trying to Self fire burn in Perambalur collector’s office!

பெரம்பலூர் அருகே காதல் மனைவியை சேர்த்து வைக்க கோரி, வாலிபர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பபு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு – நல்லம்மாள் இவரது மகன் மணிகண்டன் (வயது 24), பொறியியல் பட்டதாரி, இவரும் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த சோமு – கலையரசி ஆகியோரின் மகள் பிரசன்னாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டாற் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து மணமக்கள் இருந்த வீட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், தகவலின் பேரில் நரசத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் வீட்டில் இருந்து கலையரசிக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் பிரசன்னாவை பார்க்க அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.

செங்கல்பட்டில் இருந்து கர்ப்பிணியாக இருக்கும் பிரசன்னா காரிலும், மணிகண்டன் இருசக்கர வாகனத்திலும் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மணிகண்டன் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பிரசன்னாவை அவரது சொந்த ஊரில் பரிசோதிக்க சென்ற போது ஆள் இல்லாததை மணிகண்டனுக்கு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பல முறை போனில் தொடர்பு கொண்டு, தொடர்பு கொள்ளமுடியாததால் விரக்தி அடைந்த மணிகண்டன் இன்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து மீட்டனர். பின்னர், அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து, சம்வவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவரை மருத்துவமனைக்கு உரிய சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!