“Finding You in Your Town” project is happening this month in Veypur Union: Perambalur Collector Information!

மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், இனி ஒவ்வொரு மாதமும் கடைசி புதன்கிழமையில் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவார்கள் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட அனைத்து அலுவலர்களும் 24 மணி நேரம் தங்கி, அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

இந்த மாதம் வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் கலெக்டர் உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் முதல்நிலை அலுவலர்களும் 24 மணி நேரம் தங்கியிருந்து கள ஆய்வில் ஈடுபட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்கள்.

கலெக்டர், போலீஸ் எஸ்.பி., டி.ஆர்.ஓ உள்ளிட்ட அனைத்து மாவட்ட நிலையிலான அலுவலர்களுக்கும் ஒரு கிராமம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!