Fire incident in ration shop due to explosion of needle firecrackers near Perambalur: Goods burnt and damaged: Police investigation!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமம், அண்ணா நகரில் செயல்பட்டு வரும் பகுதி நேர நியாய விலைக்கடையில் 475 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நியாய விலை கடையின் விற்பனையாளர் தொல்காப்பியன் நேற்று விற்பனையை முடித்த பின்னர் வழக்கு போல் நியாய விலை கடையை பூட்டி விட்டு சென்றவர் இன்று ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக கதவை திறந்து பார்த்த போது, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 25 மூட்டை ரேஷன் அரிசி உட்பட ஏராளமான ரேஷன் பொருட்கள் மற்றும் 500க்கும் மேற்ப்பட்ட சணல் சாக்குகள் எரிந்து சேதமடைந்து கிடப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்த புகாரின் பெயரில் குன்னம் போலீசார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் ஊசி பட்டாசு வெடித்த போது, தீப்பொறிப்பட்டு ரேஷன் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது தெரிய வந்துள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!