பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 50).
விவசாயியான இவர் இன்று தனது வயலில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது பசுமாடு ஒன்று அருகிலிருந்த 40 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.
உடனடியாக சின்னசாமி பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் நிலைய அதிகாரி ஆறுமுகம் தலைமையில் மீட்புபடை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றினுள் உயிருக்கு போராடிகொண்டிருந்த பசுமாட்டை கயிறு கட்டி உயிருடன் மேலே கொண்டு வந்தனர்.