Firefighters rescuing a cow from a well near Perambalur
பெரம்பலூர் அருகே கிணற்றில் விழுந்த சினை பசுமாடு ஒன்றை உயிருடன் மீட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டப்பாடியில் வசித்து வருபவர் நல்லப்பெருமாள் (வயது 50). இவர் இன்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பசு மாடு ஒன்று தவறி அருகில் இருந்த விவசாய கிணற்றில் விழுந்தது. உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலைய அலுவலர் சத்தியவரதன் தலைமையில் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு கரை சேர்ந்தனர். பின்னர், பசு மாட்டிற்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.