பெரம்பலூர் அருகே ஆலம்பாடி கிராமத்தில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடந்து வருகிறது.
இந்த ஏரியில் அதிகளவு தண்ணீர் இருந்தது. இதில் ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு மீன் பிடித்திருவிழா இன்று நடந்தது.
இன்று காலை 7.30 மணி முதல் ஏரியில் இடுப்பளவு தண்ணீர் வரை இறங்கி பொதுமக்கள் கத்தா, வலை, கூடை சல்லடை போன்றவற்றை கொண்டு மீன்களை பிடித்தனர். கெழுத்தி, கெண்டை, கட்லா, போன்ற பல வகையான மீன்கள் கிடைத்தது. இதில் ஏராளமான மீன்களை பொதுமக்கள் பிடித்து சென்றனர்.
ஆலம்பாடி, பெரம்பலூர், கோனேரிப்பாளையம், ரெங்கநாதபுரம், பாளையம், குரும்பலூர், திருப்பெயர், நாவலூர், புதூர், மேலப்புலியூர், செஞ்சேரி, ஈச்சம்பட்டி, உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து அள்ளி சென்றனர்.