Floods in kutrala Falls: Allow tourists to bathe
குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறைந்ததை அடுத்து அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குற்றாலம்,தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு விடிய விடிய சாரல் மழை பெய்தது. குற்றாலம் மலைப்பகுதியிலும் சாரல் மழை பெய்ததால் இரவு 10 மணிக்கு மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் ஆர்ச்சை தாண்டி கொட்டியதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் சாரல் மழை ஓய்வு பெற்றதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. மெயின்அருவியில் ஆர்ச் மீது தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் வரத்து தாராளமாக இருக்கிறது. இதனால் அருவிகளில் விதிக்கப்பட்ட தடை நீக்கப் பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல் நடத்தினர். சிற்றருவி, புலியருவி, பழையகுற்றால அருவியிலும் தண்ணீர் விழுவதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று குளித்து வருகின்றனர்.