Flying squadron to monitor election irregularities, organization of monitoring committees; Perambalur Collector Information


பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் தேர்தல் விதிமீறல்களை கட்டுப்படுத்திட 147.பெரம்பலூர் மற்றும் 148.குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 9 பறக்கும் படை குழுவினர;களும், 9 நிலை கண்காணிப்பு குழுவினரும், மற்றும் 2 வீடியோ கண்காணிப்பு குழுவினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படை குழுவில் வாகனத்துடன் 1 தலைமை அலுவலர், 1 காவல் ஆய்வாளர், 2 காவலர்கள், 1 வீடியோகிராபர் ஆகியோர் பணிபுரிகிறார்கள்.

147. பெரம்பலூர; சட்டமன்ற தொகுதியில் பறக்கும்படை குழுவானது காலை 06.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை வட்ட வழங்கல் அலுவலர் பெரியண்ணன் (95855 30360), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் (90039 17789) , சார் பதிவாளர் ராஜ்குமார் (94436 47791) ஆகியோர் தலைமையிலும், மதியம் 02.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை துணை வட்டாட்சியர் (கனிமம்) பாக்கியராஜ் (97516 52823), டாஸ்மாக் கண்காணிப்பாளர் பொன்னுதுரை (95668 31908) , தோட்டக் கலைத் துறை அலுவலர் கனிமொழி (97151 67612) தலைமையிலும், இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை வட்டார வளர;ச்சி அலுவலர; திரு.ஆலயமணி (94424 13273) அவர;கள், வட்டார வளர;ச்சி அலுவலர; திரு.எஸ்.இளங்கோவன் (98435 48970), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்நாதன் (90429 64135) ஆகியோர் தலைமையிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளபடுகிறது.

148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் காலை 06.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர் (89400 97495), வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவர்மன் (96266 14670) , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் (90035 73994) ஆகியோர் தலைமையிலும், மதியம் 02.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை வட்ட வழங்கல் அலுவலர் திலகவதி (80129 43445), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் (97868 14671) , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி (89406 28725) ஆகியோர் தலைமையிலும், இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை மண்டல துணை வட்டாட்சியர் திருப்பதி (97918 64808), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.அமிர்தலிங்கம் (94860 67773) , வட்டார தலைமை நில அளவையர் ராஜேஸ்குமார் (86681 88983) ஆகியோர் தலைமையிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளபடுகிறது.

நிலை கண்காணிப்பு குழுவில் வாகனத்துடன் 1 தலைமை அலுவலரர் 1 காவல் ஆய்வாளர், 2 காவலர்கள், 1 வீடியோகிராபர் ஆகியோர் பணிபுரிகிறார்கள். 147.பெரம்பலூர; சட்டமன்ற தொகுதியில் நிலை கண்காணிப்பு குழுவானது காலை 06.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.செந்தில் குமார் (97860 45746) , வட்ட வழங்கல் அலுவலர் பன்னீர்செல்வம் (91235 10160) , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் (94437 03001) ஆகியோர் தலைமையிலும், மதியம் 02.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் (99945 67261) , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கே.கவிதா (96265 79942), தமிழ்வளர்ச்சித்துறை, உதவி இயக்குநர் சித்ரா (95852 25686) ஆகியோர் தலைமையிலும், இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வி.சங்கரன் (97912 43009), வட்டார துணை நில அளவையர் ரெங்கராஜ் (99431 16634) , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் (94892 47875) ஆகியோர் தலைமையிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளபடுகிறது.

148.குன்னம்; சட்டமன்ற தொகுதியில் நிலை கண்காணிப்பு குழுவானது காலை 06.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணகுமார் (98949 92070) , வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி (94424 13273) , புள்ளியியல் அலுவலர் விஜயகுமார் (98656 04811) ஆகியோர் தலைமையிலும், மதியம் 02.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சட்டநாதன் (99446 65098) , தோட்டக்கலைத்துறை சத்யஜோதி (95005 67619) , உதவி திட்ட அலுவலர் கீதா ரத்தினம் (74026 07787) ஆகியோர் தலைமையிலும், இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதிவளவன் (97875 07177) , வட்டார துணை நில அளவையர் சின்னதுரை (95972 95384) , வட்டார தலைமை நில அளவையர் ஆனந்த குமார் (99436 37753) ஆகியோர் தலைமையிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளபடுகிறது.

வீடியோ கண்காணிப்பு குழுவானது காலை முதல் இரவு 10.00 மணி வரையில் வாகனத்துடன் 1 அலுவலர், 1 வீடியோகிராபர் அடங்கிய குழுவினர்கள் பணிபுரிகிறார்கள். பெரம்பலூர; சட்டமன்ற தொகுதியில் வேளாண் அலுவலர் ரமேஷ் (81449 16148), தோட்டக் கலைத்துறை அலுவலர் விஜயகாண்டியப்பன் (97863 77886) ஆகியோர் தலைமையிலும், 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் தேவராஜ் (98427 02386) , உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் வேலவன் (81488 40878) ஆகியோர் தலைமையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளபடுகிறது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!