Food Safety Awareness Forum: inaugurated Perambalur collector.

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பொதுமக்களுக்கும், நுகர்வோர்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தின் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு அரங்கினை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா இன்று மாலை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கோடைகாலங்களில் உணவு பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், கலப்பட உணவுப் பொருட்களை கண்டறிவதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்வதற்காகவும், கலப்பட உணவுப் பொருட்களை உட்கொள்வதால் மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இம்மாதம் முழுவதும் அலுவலக வேலை நாட்களில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இந்த அரங்கம் செயல்படவுள்ளது.

இந்த மையத்தில் தெருவோர உணவு கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவகங்களில் கவனிக்க வேண்டியவை, பழம், பழச்சாறு, குளிர்பானக் கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவு பொட்டலங்களின் விவரச் சீட்டில் கவனிக்க வேண்டிய விவரங்கள் அடங்கிய பலகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

உணவில் கலப்படங்களை கண்டறிய மேற்கொள்ள வேண்டிய விரைவு சோதனைகள் குறித்தும் உணவுப்பாதுகாப்பு அலுவலா;களால்; செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

உணவுப்பொருட்களின் தரம் மற்றும் கலப்படம் குறித்தும், உணவுப் பொருட்கள் வாங்கும் போது கண்டறியப்படும் குறைகளை வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிப்பதற்கும், இம்மையத்தில் பொதுமக்களுக்கு தகவல்கள் அளிக்கப்பட உள்ளன.

கலப்பட உணவுப் பொருட்களை கண்டறிவது உணவு மற்றும் ஆரோக்கியம் பாதுகாப்பிற்கு செய்யவேண்டியவையையும், தவிர்க்கவேண்டியவையையும் குறித்த துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!