For awareness, the Deputy Director of Health Services, Gitarani, was the first person to be covishield vaccinated
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா ஒழிப்பு முன்களப் பணியாளர்களுக்கு தமிழகத்திலும், கடந்த ஜன.16 முதல் போடப்பட்டு வருகிறது. அது மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏக்கள் முன்னியலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் நபராக அத்துறையின் துணை இயக்குனர் கீதாராணி போட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், நகராட்சி முன்கள பணியாளர்கள், உள்ளாட்சி மற்றும் அங்கன்வாடி, செவிலியர்கள், மருத்துவத் துறை பயிற்சி மாணவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், முதற்கட்ட கோவிசீல்டு, தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பிப்.12 வரை முதற்கட்ட மாக 2805 பேர் போட்டுக் கொண்டனர். தற்போது இரண்டாம் தவனையான கோவிசீல்டு தடுப்பூசியை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, முதல் நபராக சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி போட்டுக் கொண்டார். அனைத்து முன்கள பணியாளர்களும், கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு, அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், சமுதாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.