For Children’s Day Festival, Perumalur Awareness Campaign
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில், ஓசை கலைக்குழுவினரால் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதனை 007 ஸ்டுடியோ உரிமையாளரும், ஓவியருமான கி.முகுந்தன் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கியதாவது:
மேலும், பெண் குழந்தைகள் பாதுகாத்தல், குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துதல், பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புதல், குழந்தை தொழிலளர்களை தடுத்தல், உள்ளிட்ட பணிகள் சைல்டு லைன் 1098 செயல்படுத்தி வருவதையும் எடுத்துரைத்தார்.
ஓசை கலை நிகழ்ச்சி குழுவினர், ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், மற்றும் விழிப்புணர்வு பாடல்கள், வழியாக பல்வேறு தகவல்களை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக சைல்டு லைன் அணி உறுப்பினர் முத்தமிழ் செல்வன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் கீதா முன்னிலை வகித்தார்.ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு, மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மற்றும் ஏகம் ட்ரஸ்ட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அணி உறுப்பினர் பட்டு நன்றி கூறினார்.