For Family Cardholders, Chief Minister MK Stalin’s Corona Relief Fund: Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக 2 ஆயிரம் வழங்கப்படும் என அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் 15.05.2021 முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக ரூ.2 ஆயிரம், காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மட்டும் வழங்கப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு தொகை வழங்குவதற்கு ஏதுவாக வழங்கும் நாள், நேரம் விபரங்களை குறிப்பிட்டு டோக்கன் 10.05.2021 முதல் 12.05.2021 முடிய மூன்று தினங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடை பணியாளர்கள் வீடுதோறும் சென்று வழங்க இருப்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சம்மந்தப்பட்ட நியாய விலை கடையில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பெரம்பலூர; மாவட்டத்தில் உள்ள 282 ரேஷன் கடைகளில் 15.05.2021 அன்று முதல்; அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை விநியோகிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பெரம்பலூர் வட்டத்தில் 49,153 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 48,631 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும், குன்னம் வட்டத்தில் 49,414 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும், ஆலத்தூர் வட்டத்தில் 35,486 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும் என மொத்தம் 1,82,684 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள். எனவே, குடும்ப அட்டைத்தாரர்கள் முகக்கவசம் அணிந்தும், 2 மீட்டர் சமூக விலகலை பின்பற்றியும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.