For hometown development, Rs. 13 crore, the international businessman DATO S PRAKADEESH KUMAR said that in the 3rd phase, Rs. 26.90 lakh provided!



பூலாம்பாடி பேரூராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அடிப்படைவசதி கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ எஸ். பிரகதீஸ்குமார், மூன்றாம் கட்ட நிதியாக 26லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார். இதுவரை அவர் அவரது ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன் சார்பில் மொத்தம் 1கோடியே 90லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சி .பூலாம்பாடி கடம்பூர், புதூர், அரசடிகாடு, மேலகுணங்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில், 10 ஆயித்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளில் சாலை வசதி,குடிநீர் வசதி,மின்விளக்கு வசதி,கழிவு நீர் கால்வாய் வசதி,ஆகிய அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் உள்ளது.
அதே போல் மலையடிவார பகுதியான அரசடிகாடு பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால் விவசாயிகள் விளை பொருட்களை வாகனங்களில் ஏற்றிச்செல்ல மிகவும் அவதிபட்டுவருகின்றனர்.அடிப்படை வசதி பற்றாக்குறையால் மிகவும் சிரமத்தை சந்தித்து வந்த பொதுமக்கள், பூலாம்பாடி பேருராட்சி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தருமாறு பன்னாட்டு தொழிலதிபரும் மண்ணின் மைந்தருமான டத்தோ எஸ். பிரகதீஸ்குமாரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்படி, பொதுமக்களின் சிரமங்களை கேட்டறிந்த அவர், பொதுமக்கள் பங்களிப்பு தொகையுடன் நமக்குநாமே திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்தார்.அதற்கான முயற்சிகளை முழுவீச்சில் ஏற்பாடு செய்த டத்தோ S.பிரகதீஸ்குமார் அரசு அதிகாரிகளிடம் கூறி பூலாம்பாடி பேரூராட்சியில் அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறியசொல்லி அதற்கான செலவினங்களையும் கேட்டறிந்தார். இதனை செய்து முடித்தால்பூலாம்பாடி பேரூராட்சி அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறும் என்பதால் ,அடிப்படை வசதிகளை நமக்குநாமே திட்டத்தின் கீழ் மொத்தம் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்து தர முடிவு செய்யப்பட்டது.
டத்தோ எஸ். பிரகதீஸ்குமாின் ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன் சார்பில் 11 கோடிரூபாய் பங்களிப்பு தொகையாக தரப்படஉள்ளது. அதன் மூலம் பூலாம்பாடி பேரூராட்சியில் சாலைவசதி,குடிநீர் வசதி,மின்விளக்குவசதி,கழிவுநீர் கால்வாய்,உயர்மட்ட பாலம் அமைத்தல்,குடிநீர் கிணறு அமைத்தல் பணிகள் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தொழிலதிபர் டத்தோ S.பிரகதீஸ்குமாரின் பங்களிப்பு தொகையாகஅவரது ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேசன் சார்பில் கடந்த வருடம் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதற்கட்ட நிதியாக 90 லட்சரூபாய்க்கான வரைவோலையையும் அக்டோபர் 28ந்தேதி இரண்டாம் கட்டநிதியாக 74 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலையையும் வழங்கியிருந்தார்.
இந்தநிலையில் நேற்று (10.04.2023) மூன்றாம் கட்டநிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார்,26 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலையை பூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமனிடம் வழங்கினார். பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், கவுன்சிலர்கள் பூங்கொடி மணி, மாணிக்கம், ராமதாஸ், ராஜலட்சுமி செல்வக்குமார், கஸ்தூரி வீராசாமி, பரகத்நிஷா அப்துல்ரஹீம், சுதாகர், ஜெயந்தி பெருமாள், செல்வராணி ராமர் தொழிலதிபர்கள் மணிகவுண்டர், இசைபாலு, மண்மணி, பூலாம்பாடி சதிஷ், மணி, செங்குட்டுவன், கவுன்சிலர்கள் செல்வி பாலகிருஷ்ணன், கண்ணகி கருப்பையா மற்றும் பூலாம்பாடி டத்தோ இளைஞர் நற்பணி மன்றத்தினர் கிராம பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!