For Persons with Disabilities, Social Data Survey, Assistive Equipment and Integrated Medical Camp: Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பிப்.26 திங்கள் கிழமை காலை 10.00 மணி அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், சமூக தரவுகள் கணக்கெடுப்பில் விடுபட்ட நபர்களை சேர்த்தல், உதவி உபகரணங்கள் வழங்குதல் ஆகிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

பெரம்பலுார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற ஆதார், குடும்ப அட்டை மற்றும் 4 புகைப்படத்துடனும், கணக்கெடுப்பில் விடுபட்ட நபர்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார், குடும்ப அட்டை, 1 புகைப்படத்துடனும் எடுத்து வரவேண்டும். இந்த முகாமினை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!